Saturday, July 5, 2014

5கிராம் எடையுள்ள புனித குரான்

பழங்கால பொருள்களை சேகரிப்பவர்கள் பலர் உள்ளனர். தை வைத்திருப்பதே அபூர்வம் ஏன சிலர் நினைப்பதுண்டு. அந்த வரிசையில் மிகச் சிறிய குர் ஆன் நூல் ஓன்று திருநெல்வேலியில்  ள்ளது.
  இஸ்லாமியர்களின் புனிதநூலாகக் கருதப்படும் இந்த குர் ஆன் நூலை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் ஒருவர். அந்த குர் ஆனை பார்த்து வியந்து செல்பவர்கள் பலர். இன்னும் சிலரோ அதை வாங்க போட்டிப் போட்டுச் செல்கின்றனர்.

தொடர்புக்கு:
த. மைக்கேல் சொர்ணக்குமார்,
திருநெல்வேலி
செல்பேசி: 
+91-8189868693
 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குர்ஆன் எடை 5 கிராம்தான். அதாவது, 2.5 -1-1 செ.மீ. அளவில் உள்ளது. இதில் உள்ள எழுத்துக்கள் அரபி மொழியால் எழுதப்பட்டுள்ளது.
  பிற குர் ஆன் போல காகிதத்திலோ, ஓலைச்சுவடிகளிலோ இது எழுதப்படவில்லை. மாறாக மஸ்லின் துணியில் எழுதப்பட்டுள்ளது. இந்த குர்ஆனின் சிறப்பம்சம் என்னவென்றால் மூலிகையுடன் தங்கப் பொடியைக் கலந்து அரபி மொழியில் குர்ஆனின் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.  இதை வெறும் கண்ணால் நம்மால் படிக்க முடியாது என்பதுதான் ஆச்சர்யம். எப்படித்தான் இத்தனை பொடியாக எழுதினார்களோ தெரியவில்லை.
  இந்த குர்ஆன் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டியுடன் எழுத்துக்களை படிக்க
ஒரு லென்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதன் உதவியுடன்தான் இதில் உள்ள வார்த்தைகளைப் படிக்க முடிகிறது. மொத்தம் 818 பக்கங்கள் கொண்டுள்ளது. ஒட்டகத்தின் தோலால் பைண்டிங் செய்யப்பட்டு மிக அழகாக காணப்படுகிறது.
இந்த குர்ஆனை வைப்பதற்காக பிரத்யேகமாக ஒரு சிறிய பெட்டி உருவாக்கப்பட்டுள்ளசது. இப் பெட்டி ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.
  முழுக்க முழுக்க கையாலேயே மிக நுண்ணியமாக குர் ஆன் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இந்த குர் ஆன் அடங்கிய அழகிய ஐம்பொன்னாலான பெட்டியின் மீது வண்ணத்தில் பழைய மெக்கா, மதினா படங்கள் உள்ளன. மொத்தம் 6666 வாக்கியங்கள் அமைந்துள்ள இந்த குர் ஆன் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைக்கிறது.